யாகம் வளர்த்தல், பூஜை செய்தல், அபிஷேகம் செய்தல், நைவேத்யம் படைத்தல், கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்ளுதல் என்று பல்வேறு இறைவழிபாட்டுச் சடங்குகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவதேயாகும்.
மக்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு விரதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்தாலும் அவற்றில் முக்கியமானது 'ஏகாதசி விரதம்'. திருமாலின் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஏகாதசி விரதமிருத்தல். ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'யோகினி ஏகாதசி' என்று பெயர். இந்த விரதமானது உடல் நோயைத் தீர்க்கும் மகத்துவம் நிறைந்தது என்கிறது ஏகாதசி மகாத்மியம் என்னும் நூல்.
நம்பிக்கையுடன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டால் பாவச் சுமைகளிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், நோய்களிலிரு ந்தும் விடுபடலாம்.