எம தீபம் எங்கு எப்போது ஏற்றவேண்டும்...?

மஹாளய பட்சத்தில் மஹா பரணியிலும், தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரண பயம் நம்மைவிட்டு அகலவும் துர் மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். 

மஹாளயபட்ச நாட்களில் குறிப்பாக மஹாளயபட்ச அமாவாசை அன்று  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில்  இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்னைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.  என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக்கூடாது.
 
யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி,  வாய்ப்புகள்  தானாகவே அமையும். 
 
எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழிபடலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய்  நொடியின்றி  ஆரோக்கியமாக வாழலாம்! 
 
யாரெல்லாம் யம தீபம் ஏற்றலாம்: பரணி, மகம், சதையம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு.
 
எங்கு ஏற்றலாம்: வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்.
 
எம தீபம் ஏற்றவேண்டிய காலம்: மஹா பரணியான இன்று  மாலை 5.55 முதல் 7.11 வரை.
 
யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்:
 
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச|
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:|

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்