சப்தகன்னியர்களில் ஒருவராக உள்ள ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடு !!

வியாழன், 5 மே 2022 (14:00 IST)
சக்தி தேவியின் அம்சங்களாக கருதப்படுபவர்கள் தான் சப்த கன்னியர்கள். அந்த சப்தகன்னியர்கள் ஒருவராக இருப்பவர் தான் ஸ்ரீ வாராகி அம்மன்.


ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் இந்த மகா வாராஹி ஹோமம் செய்வது சிறப்பு. தினங்களில் சுதர்சன ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த மகா வாராஹி ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம்.

அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

மகா வாராஹி பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

மகா வாராஹி ஹோமத்தின் முதன்மையான நோக்கமே எதிரிகள் மற்றும் துஷ்ட சக்திகளின் தொல்லைகளை அறவே நீக்குவது தான். எனவே இந்த ஹோம பூஜையை செய்து கொள்பவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். மேலும் எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

வாராகி அம்மனின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்