செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபட கஷ்டங்களை போக்குமா...?

முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள், முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். 

மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.
 
கஷ்டங்களை போக்கும் முருகப்பெருமானின் வழிபாட்டினை வீட்டில் முதன்முதலாக தொடங்க வேண்டுமென்றால் புதிய அகல் விளக்கு ஒன்று(வாரம் தோறும் இதே விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்), 2விளக்கு திரி, சுத்தமான பசுநெய், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படம் ஒன்று. 
 
உங்கள் வீட்டில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படம் இல்லை என்றால் புதியதாக வாங்கிக் கொள்ளவும். வீட்டின் மகிழ்ச்சிக்கு தனி முருகரை விட துணைவியுடன் இருக்கும் முருகப்பெருமானின் படம் மிகவும் சிறந்தது. 
 
இந்த வழிபாட்டினை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு செய்ய வேண்டும். புதியதாக வாங்கிய அகல் விளக்கை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு, இரண்டு விளக்கு திரிகளை ஒன்றாக திரித்து (ஒரு திரி போட்டு விளக்கு ஏற்றக்கூடாது), நெய் தீபம் ஏற்றி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு கிழக்கு பக்கம் பார்த்தவாறு வைத்துக்கொள்ள வேண்டும். 
 
முருகருக்கு அரளிப்பூ அல்லது முல்லை பூ வாங்கி சூட்டுவது மிகவும் சிறந்தது.  நெய் தீபம் ஏற்றிய பின்பு முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து மனதார பதினோரு முறை ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு முருகப்பெருமானுக்குரிய இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. 
 
சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம் பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம் 
– சுப்ரமண்ய மங்களாஷ்டகம் 
 
இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை தோறும் எவரொருவர் மனதார உச்சரித்து, நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றாரோ, அவருக்கு நிச்சயம் மன நிம்மதியான வாழ்க்கையும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் விடிவு காலமும் பிறக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்