ஆஞ்சநேயருக்கு உகந்த வழிபாட்டு தினங்களும் பலன்களும் !!

ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.  வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.
 
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
 
வெற்றிலை மாலை சார்த்தி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.  அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
 
ஆஞ்சநேயரை பல்வேறு விதமான பழங்களால் மாலை கட்டி வழிபாடு செய்தால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். எலுமிச்சம்பழம்,வாழை பழம், கொய்யாப்பழம், அன்னாச்சிப்பழம் ஆகிய பழங்கள் அனுமன் வழிபாட்டிற்கு உகந்தவையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்