சிறப்புக்கள் நிறைந்த புரட்டாசி மாதம் திருமாலுக்கு உகந்தது ஏன்...?

திருமாலின் ஆயிரம் பெயர்கள் (விஷ்ணு சஹஸ்ரநாமம்). உகந்த நாட்கள்- புதன் மற்றும் சனிக்கிழமை சிறப்பு. எந்நாளும் வழிபடலாம்.


மும்மூர்த்திகளில் ஒருவர். ஸ்ரீமஹா விஷ்ணு - த்வைதம் மற்றும் வைணவ நெறிகளின் தலைவர். வேறுபெயர்கள்- மஹா விஷ்ணு, பரமாத்மா, வேணுகோபாலன், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅரங்கநாதர், வேங்கடவன், கோவிந்தராஜன், வெங்கடேசப் பெருமாள், சீனிவாசன் என ஆயிரம் ஆயிரமாக சொல்லி கொண்டே போகலாம். 
 
உகந்த மலர்கள்- தாமரை, மருக்கொழுந்து, பவளமல்லி, துளசி அதி சிறப்பு. ஆயுதம் - சங்கு , சக்கரம் , மற்றும் கதாயுதம், பஞ்சாயுதங்களையும் கொண்டவர்.
 
விழாநாட்கள் -  வைகுண்ட ஏகாதசி விழா, மாசிமகம் தீர்த்தவாரி- பாற்கடலில் தோன்றிய பார்கவியை பரந்தாமன் மணந்ததால், தன் மாமனார் கடலரசனை கண்டு நீராடும் நாளாகும்.
 
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரதன்று வாமன அவதாரம். புரட்டாசி துவிதியை திதியன்று பலராமன் அவதாரம்.
 
புரட்டாசி மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவி அவதாரம். சூரியன் கன்யாராசியில் பிரவேசிப்பதால் இம்மாதம் கன்யா மாதம் எனப்படும். 
 
புரட்டாசி சனியன்று சனீஸ்வரன் அவதாரம். புரட்டாசி பௌர்ணமியில் சிவன் த்ரிபுரம் எரித்தார். 
 
திருப்பதியில் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வைகுண்ட ஏகாதசி பிரமோற்சவத்தை பிரம்ம தேவன் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கின்றது ப்ரம்ஹ வைவர்த்த புராணம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்