உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவிமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.
தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.