வீட்டின் எந்தெந்த இடங்களில் விளக்கு ஏற்றுவது நல்லது...?

தீபம் ஏற்றி வழிபடுவது என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடாக உள்ளது. நாம் வாழும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவதால் உடல் ஆரோக்கியம், பணவரவு அதிகரித்தல், மன நிம்மதி போன்றவை பெருகும். இந்த தீபம் ஏற்றும் வழிமுறையை சிறப்பிக்க உருவாக்கப்பட்டதே கார்த்திகை தீபம். 
 
வாசலை நன்றாக சுத்தம் செய்து அரிசி மாவினால் கோலமிட்டு வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்து தினமும் வழிபட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
 
பூஜை அறையில் இரண்டு கார்த்திகை விளக்குகளை ஏற்றி வைத்து வணங்கி வந்தால் எல்லா விதமான மங்கல காரியங்களும் கிடைக்கும்.
 
தினமும் வீட்டின் சமையல் அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டால் அன்ன தோஷம் ஏற்படாது. இதனால் உணவிற்கும் பஞ்சம் ஏற்படாது.
 
வீட்டின் வெளிப்பகுதி அல்லது தோட்டம் போன்ற பகுதிகளில் எமனை நினைத்து விளக்கு ஏற்றி வந்தால் மரண பயம் நீங்குவதோடு ஆயுள் விருத்தியும் ஏற்படும்.
 
வீட்டின் வெளிப்பகுதியில் திண்ணைகள் இருந்தால் அதில் தினமும் நான்கு விளக்குகளை ஏற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் கெட்ட சக்திகள் நெருங்காமல் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்