அன்னபூரணியின் அருமையை சிவபெருமான் உணர்ந்தது எப்போது...?

புதன், 25 மே 2022 (17:22 IST)
சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், உலகம் மாயை எனவும் இம்மாயையில் உணவும் ஒரு பகுதி எனவும் கூற, உணவு உட்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார்.


இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி) உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார். பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது, உலகமே வெறுமையானது.

எங்குமே உணவின்றி எல்லாரும் பசியால் வாடினர். மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி, மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார்.

உடனே தன் உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன், "இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் மாயையல்ல என்றும் அறிந்து கொண்டேன்" என்று கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, தன் கையால் உணவு வழங்கி மகிழ்ந்தார். அப்போதிலிருந்து பார்வதி, நலவாழ்வுக்கான கடவுளாக வணங்கப்படுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்