வீட்டில் வழக்கம் போல் பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் தனியாக ஒரு தாம்பூலத் தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள் குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.