நவக்கிரகங்களில் சனி பகவானை மற்ற தெய்வங்களை வணங்குவது போல, நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்யக்கூடாது. பக்கவாட்டில் நின்றபடி வழிபடுவது நல்லது. பொதுவாக சனி பகவானுக்கு அடக்கத்துடன் இருப்பவர்களை மிகவும் பிடிக்கும்.
புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், சூரிய பகவானிற்கும், சாயாதேவிக்கும் சனிபகவான் பிறந்தார். அதனால் தான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருப்பதுடன், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட பெருமாளை பயபக்தியுடன் வணங்கி வழிபடுகிறோம்.
சனி பெயர்ச்சி நாளில் கர்ம காரகனான சனி பகவானின் அருளை பெற அனைத்து ராசியில் பிறந்தவர்களுமே வணங்குவது நல்லது. சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.