வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள். இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான்.
வாராகி அருள் நமக்கு இருக்கிறது என்ற கர்வமும், அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது. வாராகி நமக்கு முன்கூட்டியே நிகழ்வுகளை எண்ணவடிவாக சொல்லி எச்சரிப்பாள். அதை உள்வாங்கும் மனதூய்மை நமக்கு என்றும் வேண்டும்.
மனத்தில் பொய், வஞ்சம், இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது. நெறி எனும் முக்கிய விதியை யார் கடைபிடிக்கின்றார்களோ. அவர்களிடத்தில் பிரியம் கொண்டு அன்போடு அருளாட்சி செய்பவள் தான் இந்த வாராகி அன்னை.