கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள். போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.
இதை பெரியவர்களோ, கிராமங்களில் உள்ளவர்களோ பாட்டியம், பாட்டிமுகம், பாட்டுவம், பாட்டிமை இப்படி ஏதாவது ஒரு பெயர் சொல்லி அழைப்பார்கள். அமாவாசையிலோ, பௌணர்மியிலோ பூமியில் கதிர்வீச்சின் தன்மையும், ஈர்ப்பு விசையும் மாறுபட்டிருக்கும் ஆனால் முதல் திதியான பிரதமை திதியில் கதிர்வீச்சு குன்றுவதால் எந்த சுபகாரியங்களும் செய்யகூடாது என்பது சாஸ்திர நம்பிக்கையாகும்.