எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. சொர்ண கணபதி மந்திரத்தை உச்சரித்து, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் ஏற்படும். பொன், வெள்ளி, செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகர் உருவங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அதை விடவும் எளிதான முறையில் பசும் சாணத்தை பயன்படுத்தி பிள்ளையார் செய்து, சாதாரண அருகம்புல் சாற்றியும் வழிபடலாம். அருகம்புல்லை மட்டும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் சகல தோஷங்களும் விலகி விடும்.
சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். தடைபட்ட திருமணம் தக்க காலத்தில் நடைபெற மஞ்சளால் பிடித்து வைத்த விநாயகரை, 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்து பலன் பெறலாம். குடும்பத்தின் வறுமை நிலை நீங்க வெள்ளெருக்கு திரி போட்டு நெய்தீபம் ஏற்றி விநாயகரை வழிபடலாம்.