அனுமன் வழிபாடு நமக்கு உணர்த்தும் தத்துவங்கள் என்ன...?

அனுமன் வழிபாடு நமக்கு உணர்த்தும் தத்துவங்கள் அநேகம். சிரஞ்சீவியான அனுமனை வழிபடுவதன்மூலம் நாம் அடையும் பலன்கள் ஏராளம்.


அதிலும் தனுர்ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதத்தில் மூல நட்சத்திர தினமான அனுமன் ஜயந்தி நாளில் வழிபாடு செய்தால் அற்புத பலன்களைப் பெறலாம்.
 
அனுமன் வழிபாடு ருண - ரோகங்களை  நிவர்த்தி செய்யும் ராமருக்கும் சீதைக்கும்  இணைப்புப் பாலமாக இருந்தவர் அனுமன் எனவே தம்பதியர்களின்  பிரச்சனைகள் தீரவும் அனுமன் வழிப்பாட்டை மேற்கொள்ளலாம் 
 
சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர் கள்  சனி திசை, சனி புத்தி நடப்பவர்கள், ஏழரைச்சனி, அஸ்டமத்து சனி, அர்த்தாக்ஷ்டமச்சனி, கண்டகச்சனி, விரயச் சனி, ஜென்ம சனி போன்ற சனி ஆதிக்கங்கள் ஜாத கத்தில் நடந்தால் அனுமன் பிறந்த மூலநட்சத்திரமன்று ஆலயத்திற்குசென்று ஆஞ்சநேயரை வழிபட்டால் தடைகளும்  தாமதங்களும் விலகும்.
 
வாலில் மணியை கட்டிய ஆஞ்சநேயரை வழிப்பட்டால் பணியில் இருந்த தொய்வு அகலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய இராம தூதனாம் அனுமனை மூல நட்சத்திரத்தன்று வழிபாடு செய்வது உகந்தது.
 
ஆஞ்சநேயரை மனதில் நிறுத்தி ஸ்ரீராம ஜெயம் என்ற ஸ்லோகத்தை சொல்லிவந்தாலே அனைத்து விதமான தீயசக்திகளிலிருந்தும் விடுபடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்