மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய விரதமுறைகள் என்ன...?

திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:58 IST)
மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுப்பார்கள்.


இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும்.

சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறைவனுக்காக நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பது தான், இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.

மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.

மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்