இறை வழிபாட்டிற்கு மிகச்சிறந்த கார்த்திகை மாத விரதங்கள் என்ன...?

முருகப்பெருமானை நினைத்து, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. 

தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரதமுறையில், பகல் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்யவேண்டும். இந்த விரதத்தால் வாழ்வில் பதினாறு வகையான செல்வங் களையும் பெறலாம்.
 
தீபத் திருநாள்: கார்த்திகை மாத பவுர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை தீபத்திருநாள் என்றும் அழைப்பர். 
 
சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சி அருளிய திருநாள் இதுவாகும். முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இந்தத் திருநாள் வழிபாட்டுக்குரியதாகிறது. இந்த நாளில் இல்லங்களில் தீபம் ஏற்றினால் ஒளிமய வாழ்வு அமையும்.
 
ஞாயிறு விரதம்: கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது.

நவக்கிரகங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டே பல வரங்களைப் பெற்றனர். எனவே இந்த விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
 
ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள குப்தகங்கை தீர்த்தத்தில், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை நீராடுவது சிறப்புக்குரியது. அன்று அதிகாலையில் சிவனும் சக்தியும், குப்தகங்கை யின் கிழக்கு கரையில் வீற்றிருந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், பாவங்கள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்