தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்றுதான் சங்கு என்பது ஐதீகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை இடம்புரிச் சங்கு. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும்.
சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை இடம்புரிச் சங்கு. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம் வகை, வலம்புரி. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மை பெறுகிறது. மூன்றாவது சலஞ்சலம் சங்கு. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் சங்கு கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது பாஞ்சஜன்யம். இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும்.