சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் என்ன பலன்கள் !!

செவ்வாய், 21 ஜூன் 2022 (11:33 IST)
செவ்வாய் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் கோயிலில் விசேஷமான பூஜைகள் நடைபெறும். இந்நாளின் ராகு கால வேளையில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலமாக வராத கடன்கள் திரும்பி வந்துவிடும், பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.


பால், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களை பைரவருக்கு வாங்கி கொடுத்து 8 மாதம் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் அந்த மாதத்திற்கு பண கஷ்டம் என்பதே ஏற்படாது. இப்படி ஒவ்வொரு மாதமும் அவரை வழிபட எத்தகைய கடன்களும் நீங்கி செல்வ வளம் பெருக துவங்கும்.

அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அன்று முழுவதும் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதமிருந்து, கோயிலுக்கு சென்று, கால பைரவருக்கு பஞ்சதீப விளக்கு ஏற்றி வழிபடுவது எத்தகைய கடன்கள் இருந்தாலும் விரைவில் அடைப்பதற்கான பரிகாரமாக இருக்கும்.

பைரவருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் அல்லது சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைத்து, அதை பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு அல்லது ஏழை எளியவர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் நினைத்தது நடக்கும்.

இந்த தேய்பிறை அஷ்டமியில் ஒரு கைப்பிடி பச்சரிசியை பித்தளை, வெள்ளி அல்லது செம்புத் தட்டில் வைத்து, சிவபெருமானுக்கு பூஜை செய்துவிட்டு, அந்த அரிசியை வீட்டிற்கு கொண்டு வந்து அரிசி பானையில் சேர்த்து விடுவதன் மூலம் நமது அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்