கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கிருத்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு இட்டு வீட்டில் குத்து விளக்கேற்றி தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து முருகனை வழிபாடு புரிய வேண்டும். அன்று நீர் மட்டும் அருந்தி முருகப் பெருமானின் காயத்ரி மந்திரங்கள், முருகன் ஷஷ்டி கவசத்தையும் பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.
இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து ஸ்கந்தனின் மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து ஸ்கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம்.