ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

Webdunia
ருத்ராட்சத்திற்கு தனித்துவமான பல சிறப்புகள் உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
நீங்கள் புது இடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது. மனநிலை  சாந்தமாகவே இருக்கும். சக்தி வட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும். ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல்  ஆரோக்கியம் தரும். ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி மன அமைதியையும்  சுறுசுறுப்பையும் தரும். 
 
ஆறுமுகம்கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு  பாத்திரமாகலாம். ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும்  தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின.
 
ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்தவேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து  வெளிப் பட்டவுடன் அதிகவேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.  சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன்எவ்வாறு தன்னுடைய  ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்