நெய்விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?

இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நோய் தொற்றுகளை பரவ விடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
 
அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம். ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம்  தருவதாக நம்பிக்கை. 
 
இல்லங்களில், தினமும் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷம். அதேபோல், மாலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். இந்த நேரமே பிரதோஷ வேளை ஆகும்.
 
நெய் அல்லது எண்ணெய்யை விளக்கில் பயன்படுத்தும்போது பூரணமாக, அதாவது வழிய வழிய ஊற்றி, பிறகு திரியை வைத்து ஏற்ற வேண்டும். குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால்,  தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்