பண்டிகை விசேஷ நாட்களில் தான் ஏற்றி வைப்போம். மற்ற சமயங்களில் நம் வீட்டு பூஜை அறையில் அந்த விளக்கு அந்த குத்துவிளக்குகள் பயன்படுத்தாமல் தான் இருக்கும். பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் நடக்கும்போது நன்முடைய குத்துவிளக்கை இரவலாக கேட்கலாம். அப்படி கூட நம் வீட்டில் ஏயற்றிய குத்துவிளக்கை அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது நலுங்கு வைப்பதற்கு, ஹோமம் வளர்ப்பது, வீட்டில் பெரிய பூஜைகள் வைப்பது, இப்படிப்பட்ட பெரிய விசேஷங்களை நடத்தும்போது , குத்து விளக்கு இல்லாத பட்சத்தில், அடுத்தவர்களது வீட்டில் வந்து இரவில் கேட்பார்கள். நம் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்த குத்துவிளக்கை அடுத்தவர்களுக்கு நாம் இரவலாகக் கொடுக்கும்போது, நம் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யம், லட்சுமி கட்டாயம், அதிஷ்டமும் அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
முடிந்தவரை குத்துவிளக்கு, பஞ்ச பாத்திரம், கலசம் போன்ற செம்பு, பித்தளை சொம்பு, இப்படிப்பட்ட நம் வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்கள் வீட்டு விசேஷத்திற்கு கூட இரவல் கொடுப்பது அவ்வளவு சரியான முறையல்ல.