வைகாசி மாத ராசிபலன்கள் 2023! – தனுசு!

செவ்வாய், 16 மே 2023 (09:06 IST)
கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், குரு, ராகு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

30-05-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

01-06-2023 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல் துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

மூலம்:

இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பூராடம்:

இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: மே 18, 19; ஜூன் 14, 15

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்