வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும் தடவி குளிக்க நன்மை பெருகும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும், கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம்.
ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணெய்யை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும். வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.