சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது.
"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன்" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.
நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.