பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.