கெட்ட கனவுகளால் வரும் தொல்லையை போக்கும் சிவபெருமானின் மந்திரம் !!

இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, ஒரு மந்திரத்தைப் பற்றி  தெரிந்துக்கொள்வோம்.

சிவபெருமானை மனதார நினைத்து, நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு, அதன் பின்பு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு, சிவபெருமானே நீயே துணை என்று சொல்லிவிட்டு, தூங்கச் செல்லுங்கள். கட்டாயம் மன நிம்மதி கிடைத்து தேவையற்ற மன பயம் நீங்கி, எதிர்மறை ஆற்றலின் மூலம் வரக்கூடிய தாக்குதல்கள்  நீங்கி, நிம்மதியான தூக்கம் கட்டாயம் வரும் என்பதில் சந்தேகமே கிடையாது.
 
சிவபெருமானின் மந்திரம்:
 
சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங் வங் சிவாய நம
ஓம் நம சிவாய நம
 
இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உறங்கினால் கட்டாந்தரையில் படுத்தால் கூட, பட்டு மெத்தையில் சொர்க்கத்தில் தூங்குவது போல ஒரு மன அமைதி  கிடைக்கும். திருட்டு பயம் நீங்கும். பேய் பிசாசு கனவு கட்டாயம் வரவே வராது. துஷ்ட சக்திகள் உங்களை நெருங்க முடியாது.

இதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு  உடலில் இருக்கும் நோயால், அதன் மூலம் ஏற்படக்கூடிய வலியால் அவதிப்பட்டு வருவார்கள். அவர்களால் உடலில் ஏற்படும் உபாதைகளால் தூங்கவே முடியாது.  அப்படிப்பட்ட உபாதைகளைக் கூட கட்டுப்படுத்தக் கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.
 
தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் இந்த மந்திரத்தை தூங்கச் செல்லும்போது உச்சரித்துக் கொண்டே வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் பல  மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்