இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான் சித்த சுத்த என்னும் மனத்தூய்மை உண்டாகும். ஆனால் காயத்ரியை ஜபித்தது முதல் சித்தசுத்தி உண்டாக தொடங்கி விடும். அனைத்து நலன்களையும் தரும் காயத்ரி என்னும் மந்திரசக்தி நம்முள் அணையாமல் விருத்தியாக அருள்புரிய வேண்டும். ஒருநாளும் காயத்ரி மந்திரத்தை மறக்காத வரத்தை வேண்டுவோம். இந்த மந்திரத்திலுள்ள எழுத்துக்களும், அதற்குரிய தெய்வம் ஜபித்தால் உண்டாகும் பலனும் இங்கு இடம் பெற்றுள்ளது.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.