நம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கும் துளசி செடி...!

துளசி நமது மத சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. உயிர்களும், உயிராற்றல் உள்ள அனைத்தையும் இறைவனாக பாவித்து வணங்குவது பாரத  நாட்டிற்கே உரிய மரபாகும். ஞானிகள், முனிவர்கள் பல செடிகளின் தன்மைகளை பற்றி கூறும்போது, நன்மை அளிக்கும் துளசி செடியை பற்றிய சில  விஷயங்களை கூறியுள்ளனர்.
இன்று உலகின் பல வெப்பமண்டல பகுதிகளில் இச்செடி வளர்க்கப்பட்டாலும் இதன் பூர்வீகம் இந்தியா ஆகும். இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்கள்  வீட்டில் இறைவனாக பாவித்து வணங்கப்படும் செடி துளசி ஆகும். இச்செடியை வீட்டில் வளர்ப்பதால் துஷ்ட சக்திகள் மற்றும் விஷ ஜந்துகள் அந்த வீட்டில்  நுழையாது.
 
துளசி மந்திரம்:
 
நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸபபத் ப்ரதாயிகே.
 
தினமும் அதிகாலை மற்றும் சந்தியா கால வேளைகளில் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் நம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி இறையாற்றலை நிரப்பும் ஆற்றல் கொண்ட இறைமூலிகையாகும் துளசி. வீட்டில் வளர்க்கப்படும் துளசி செடி அந்த வீட்டின் உயிராற்றலை தன்னுள்  வைத்திருப்பதாக ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்