ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் உண்டு. அமாவாசைக்கு முன்னதாக மூன்றாம் நாளில், பிரதோஷம் வரும். அதேபோல, பெளர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாக பிரதோஷம் வரும்.
மாதந்தோறும் வருகிற இரண்டு பிரதோஷத்தின் போதும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். முக்கியமாக அன்றைய தினத்தில், பிரதோஷ நாயகன், சிவாலயத்தில் கொடிமரத்துக்கு அருகில் இருக்கும் நந்திதேவர்தான். அன்றைய நாளில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
நமசிவாயம் சொல்லி, சிவனாரை வணங்குவதால், எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறைகள் அனைத்தும் நீங்கப் பெறும்.