தை மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு !!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சக்தி வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். பொதுவாகவே செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், காலையும் மாலையும் அம்பாளுக்கு பூஜைகள் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது.

தை மாத வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் அம்பிகையை ஆராதிப்பதும் வணங்குவதும் பிரார்த்தனை செய்வதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும்.
 
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இந்தநாளில், மகாலக்ஷ்மியை வணங்கினால், மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம்  நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
 
இந்தநாளில், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யலாம். அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். அதேபோல், அபிராமி அந்தாதி படிப்பதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் நல்ல அதிர்வுகளை இல்லத்தில் வியாபிக்கச் செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்