தை அமாவாசையின் சிறப்புக்களும் அதன் வழிபாட்டு பலன்களும் !!

திங்கள், 31 ஜனவரி 2022 (15:35 IST)
முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் அமாவாசை.


ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், பெற்றோரை இழந்தவர்கள் தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.

உங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்வதும், எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து வயிறு நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தை அமாவாசையில் வீட்டை சுத்தம் செய்து, வாசலில் கோலம் போடாமல் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும்.

தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்