அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம். சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பை சொல்லி படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
'ர" என்ற எழுத்திற்கு ஞானத்தை தர வல்லது என்று பொருள்.
'ண" என்ற எழுத்திற்கு சாந்தத்தை தரவல்லது என்று பொருள்.
ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து 'ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா" என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.