சிவபெருமானை இந்த தானியங்களை கொண்டு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!

சிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும்.
திங்கள் கிழமை சிவபெருமானை வழிபடுவது மிகவும் விஷேசமானது, திங்கள் கிழமையன்று சிவலிங்கத்தை குளிர்ந்த பால், வில்வ இலைகள் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு வழிபடுவது சிவபெருமானை அதிகம் மகிழ்விக்க கூடியதாகும்.
 
சிவபெருமானை கம்பு தானியத்தை கொண்டு வழிபடுவது திருமணமான தம்பதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த மனைவி அல்லது கணவன் வேண்டுமென விரும்புபவர்கள் நிச்சயம் இந்த தானியத்தை வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும்.
 
குழந்தை இல்லாமல் தம்பதியர் கோதுமையாலும், நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுபவர்கள் எள் கொண்டும், பாவங்களை விலக்க பச்சைப்பயிறு கொண்டு வழிபடுவது நல்லது.
 
சிவபுராணத்தின் படி அரிசியை வைத்து சிவபெருமானை வழிபடுவது ஒருவரின் நிதி நிலைமையை அதிகரிக்கக்கூடும், மேலும் வருமானத்தையும் அதிகரிக்கும். புராண கால முனிவர்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு தானியமும் சிவபெருமானை எப்படி சரணாகதி  அடைகிறது என்று கூறி இருக்கிறார்கள்.
 
வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும், துயரங்களையும் எதிர்கொள்பவராய் இருந்தால், சிவபெருமானை பார்லி தானியத்தை கொண்டு வழிபடவேண்டும். இது சிவபெருமானின் அருளை பெற்றுத்தரும். மேலும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை அதிகரித்து, தீய  சக்திகளை நீக்கி, நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத்தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்