அலைச்சலையும், சஞ்சலத்தையும் குணமாக கொண்ட சனியானவர், மெலிந்த தேகத்தையுடையவனாகவும், நீண்ட சரீரத்தை கொண்டவனாகவும், வாத ரோகங்களையும் நரம்பு தொடர்பான நோய்களையும் ஆள்பவனாக இருப்பான் என்கிறது.
சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.
சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3, 6, 9, 10, ஆகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.