வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளை விரட்டும் பரிகாரம் !!

உப்பு எதிர்மறை சக்திகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. உப்பை கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாக சொல்கிறார்கள்.


உப்பை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நேர்மறையாக பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மை சுற்றி பரவ  ஆரம்பிக்கும்.
 
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு, வலது புறமாக அமர்ந்து, கைகளை தொடையில் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி வைத்து இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்து நீங்கள் வேண்டுவதெல்லாம் உங்களுக்கு கிடைக்குமாம்.
 
உப்பையும், மிளகையும் கோயில் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோயில்களில் பார்த்திருப்போம். முக்கியமாக அம்மன் கோயில்களில் இது சகஜம்.  உப்பையும் மிளகையும் பலிபீடத்தில் போட்டு வழிபட்டால் எதிரிகள் ஒழிந்து விடுவார்கள் என்பதும் சில இடங்களில் உள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து  வருகிறது.
 
வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்திகளை விரட்ட இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் செய்ய வேண்டுமாம். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி ஒரு எலுமிச்சம் பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைத்து, 4 காய்ந்த மிளகாய்களை எடுத்து, அதனை சுற்றி நான்கு  மூலைகளிலும் வைத்து, இதனை தலைவாசல் கதவின் உட்புறப் பகுதியின் மூலையில் வைக்க வேண்டும்.
 
மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.  அப்படி மாற்றும் போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் இந்த மூன்று பொருள்களையும் ஓடும் நீரில் விட்டு விடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்