தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது. பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.