வரிகுமட்டி காய்: அம்மாவசை, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் வரி குமட்டிகாய் பச்சை காயாக எடுத்து வந்து நான்கு பாகமாக வெட்டி அதில் சிகப்பு தடவி வீட்டில் உள்ள நபர்களையும், வீட்டையும் சுற்றி போட துர்சக்திகள், துர்தேவதைகள், பேய், பிசாசு, தீய சக்திகள் விலகி போகும்.
சாம்பல் பூசணி: சாம்பல் பூசனிகாய் வாங்கி அதில் துளையிட்டு சிகப்பு போட்டு துளையை மூடி பொரிய கற்பூர வில்லை அதன் மேல் வைத்து பற்றவைத்து வீட்டை ஒரு முறை சுற்றி வந்து முச்சந்தியில் உடைக்க தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி
எல்லாம் விலகி போகும்.
தெய்வீக தன்மை: தூங்கும் அறை பிரகாசமாகவும், தெய்வீக தன்மை பொருந்தி இருத்தல் வேண்டும். முடிந்த வரை சுத்தமாகவும், கலைந்த உடைகளை அப்புறபடுத்தி வைக்கவும். அறை முழுவதும் வெண்மை நிறமாகவும், பொருட்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கவும். இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.