கரிசலாங்கண்ணியின் காய், வேர், இலை, பூ ஆகிய எல்லா பகுதிகளும் மருத்துவ குணம் உடையவை. ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை இது. உயர் ரத்த அழுத்த நோயை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
கரிசலாங்கண்ணி மூலிகையில் டீ, சூப் தயாரித்து சாப்பிடலாம். இதுதவிர கூந்தல் தைலம், மூலிகை பல்பொடி ஆகியவற்றையும் தயாரிக்கலாம்.
தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும்.
தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதில் தங்கச்சத்து இருப்பதால், 6 மாதம் பயன்படுத்தினால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.
கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து, கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் தயார்.