ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல் என்று பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடனை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் வடைமாலை சாத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அந்த வடையை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி பகவான், ராகு இருவரின் தொல்லைகளில் இருந்து மனிதர்கள் விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.