எதிர்மறை ஆற்றலை போக்கும் சக்தி வாய்ந்த சிவ மந்திரங்கள் !!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (18:03 IST)
ஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. 

சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக  காணலாம்.
 
1. பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
 
"ஓம் நமசிவாய"
 
சிவபெருமானை போற்றுவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப் பட்டது. "நான் சிவபெருமானை வழிபடுகிறேன்" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
 
2. ருத்ர மந்திரம் :
 
"ஓம் நமோ பகவதே ருத்ராய"
 
இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
3. சிவ காயத்ரி மந்திரம் :
 
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"
 
இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்