தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – Midhunam | Pongal Special Astrology Prediction 2025

Prasanth Karthick

வெள்ளி, 10 ஜனவரி 2025 (17:02 IST)
பிறக்கும் புத்தாண்டு தமிழர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலுடன் மகிழ்ச்சி கரமாக தொடங்குகிறது. தனசேர்க்கையின் மாதமான தை மாதத்தில் ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.


 
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் செவ்வாய்(வ), சந்திரன் -  சுக  ஸ்தானத்தில் கேது -  களத்திர  ஸ்தானத்தில் புதன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சனி -  தொழில்  ஸ்தானத்தில் ராஹூ  - அயன சயன போக  ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

14.01.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று  செவ்வாய்  ராசிக்கு  மாறுகிறார்.
13.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
19.01.2025 அன்று  களத்திர ஸ்தானத்தில்  இருந்து  புதன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
28.01.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
05.02.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
மிதுன ராசியினரே இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக நீங்கள் அலையும் அலைச்சல் வெற்றி தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண்  பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

மிருகசீருஷம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

திருவாதிரை:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சுக்கிரன்;
சந்திராஷ்டம தினங்கள்: ஜன: 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்:  பிப்: 6, 7, 8

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்