குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று. குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.
செய்முறை: இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.