புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு கல்யாணம், காதுகுத்து விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாயாருக்கு இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
3-ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தவிர்க்க முடியாத தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையப்பமிட வேண்டாம். 24-ஆம் தேதி வரை செவ்வாய் 6-ல் நிற்பதால் எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்து வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். 5-ல் சனி தொடர்வதால் பிள்ளைகளால் பிரச்னைகள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம்.
கன்னிப் பெண்களே! காதல் கனிந்து வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, ஆறுதலான வார்த்தையோ இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். வளைந்துக் கொடுத்துப் போவதால் வாழ்க்கை நிமிரும் மாதமிது.