நவகிரக வழிபாடும் அதன் அற்புத பலன்களும் !!

நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான  சிறப்பு வழிபாட்டுத் தலங்கள்  ஆகும். 

இப்பிறவில் ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனின் ஆணைப்படி நவகிரகங்கள் வழங்குவதாக இந்து மதத்தில்  கருதப்படுகிறது.
 
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
 
செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
 
குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும்  யோகம் உண்டாகும்.
 
சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும். ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
 
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை  வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
 
நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்