ஒரு மனிதனின் தலையில் இருந்து கால் வரை உள்ள ஒற்றை உறுப்புக்கள் இவையே. நெற்றி (பிரம்மந்திரா), தொண்டைக் குழி (ஆங்ஞை), மார்புக்குழி (விசுத்தி), தொப்புள் குழி (மணிப்பூரம்), ஆண்/பெண் குறி (சுவாதீஸ்டன்), மலக்குழிக்கு மேல் (மூலாதாரம்).
இந்த சுழுமுனையே முருகன். இதற்கு இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.