காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அதிசய மாமரம்...!!

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கினால் மனதில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள்  ஒன்றாகும். 

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்த கோவிலின் முக்கிய கடவுளான சிவன், ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது.
 
ஏகாம்பரேஸ்வரரின் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது திருமணக்கோலம் என்கிறார்கள்.
 
இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
 
மாமரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருவது மிகவும் அதிசயமாக உள்ளது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்