தடைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் மருதாணி செடி !!

மருதாணி என்றாலே பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு அழகுசாதன பொருள். அதுமட்டுமல்லாமல் கடவுளின் அருள் நிறைந்த இந்த மருதாணியை கையில் இடும் பொழுது மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது. 

மருதாணி செடி மகாலட்சுமியின் மனம் மகிழ்ந்து ஆசி பெற்ற ஒரு அற்புத செடி. எமனிடம் இருந்து சிறந்த வரம் வாங்கிய தாவரம். இவ்வளவு அருள்நிறைந்த மருதாணி செடியின் இலை மற்றும் விதைகளை நாம் முறைப்படி பயன்படுத்தினோம் என்றால் கடவுளின் அருள் நமக்கும வந்து சேரும்.
 
மருதாணி பொடி மற்றும் அதன் விதைகளை வைத்து செய்ய வேண்டிய பூஜை: நாட்டு மருந்துக் கடையிலிருந்து மருதாணி பொடி மற்றும் மருதாணி விதைகளை ஒரு கால் கிலோ அளவு இருக்குமாறு வாங்கிக் கொள்ள வேண்டும். 
 
ஒரு கண்ணாடி அல்லது பித்தளை கிண்ணத்தில் சில்லரை காசுகளை போட்டு அதன் மீது  மருதாணி பொடி மற்றும் அதன் விதைகளை அந்த கிண்ணம் மூழ்கும் அளவிற்கு போட வேண்டும். இதனை பூஜை அறையில் வைத்து அதற்கு மேல் ஒரு மண் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த பூஜையினை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.
 
வீட்டில் இந்தப் பூஜையினை செய்வதால் தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடந்தேறும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஒரு அழகிய தேவதை இந்த மருதாணி செடி ஆவாள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்