மார்ச் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Prasanth Karthick

செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (18:30 IST)
மார்ச் மாத ராசிப்பலன்கள் மற்றும் செய்யவேண்டிய பரிகாரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்

ரிஷபம்:

கிரகநிலை:
ராசியில்குரு -தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் செவ்வாய் -பஞசம  ஸ்தானத்தில் கேது -தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -லாப  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.
09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.
14-03-2025 அன்று சூரிய பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

பலன்:
குணத்தில் சாந்தமாக இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். 

கார்த்திகை:
இந்த மாதம் தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

ரோகினி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

 
பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்:  15, 16, 17

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்